/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரை இணைப்பது குறித்து செய்யூரில் ஆலோசனை
/
வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரை இணைப்பது குறித்து செய்யூரில் ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரை இணைப்பது குறித்து செய்யூரில் ஆலோசனை
வாக்காளர் பட்டியலில் விடுபட்டோரை இணைப்பது குறித்து செய்யூரில் ஆலோசனை
ADDED : டிச 28, 2025 06:11 AM

செய்யூர்: வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்ட வாக்காளர்களை இணைப்பது குறித்து, அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம், செய்யூரில் நேற்று நடந்தது.
தேர்தல் கமிஷன் உத்தரவுப்படி, தமிழகம் முழுதும் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்த பணிகள் நடந்து முடிந்து, வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், செய்யூர் சட்டசபை தொகுதிக்கு உட்பட்ட 263 ஓட்டுச்சாவடிகளில் 32,394 பேர் நீக்கப்பட்டு, 1,95,861 பேர் வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று உள்ளனர்.
இந்நிலையில், 2022ம் ஆண்டு வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியலில் இடம் பெற்று, இருப்பிடம் அல்லது பெற்றோர் பெயர் பதிவு செய்யப்படாமல் இருந்த, 2,326 பேர், எந்த பட்டியலிலும் இடம் பெறாமல் 'நோ மேப்பிங்' செய்யப்பட்டு உள்ளவர்களின் விபரங்கள் தெரிவிக்கப்பட்டு, நோட்டிஸ் வழங்கி, 7 நாட்களுக்குள் அடையாள அட்டையை வழங்கி, மீண்டும் வாக்காளர் பட்டியலில் இணைத்துக் கொள்வது குறித்து, ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
செங்கல்பட்டு மாவட்ட வட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் நல அலுவலர் வெங்கடாசலம் தலைமை வகித்தார்.
அனைத்து கட்சியினர் பங்கேற்ற இந்த ஆலோசனைக் கூட்டம், செய்யூர் தாசில்தார் அலுவலகத்தில், நேற்று மாலை 3:00 மணியளவில் நடந்தது.
இதில் தி.மு.க., - அ.தி.மு.க., - பா.ஜ.க., உள்ளிட்ட கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

