/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கூட்டுறவு கடன் சங்கங்கள் அதிக கடன் வழங்க உத்தரவு
/
கூட்டுறவு கடன் சங்கங்கள் அதிக கடன் வழங்க உத்தரவு
ADDED : ஏப் 23, 2025 07:50 PM
செங்கல்பட்டு:தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள், அதிகமாக கடன்கள் வழங்க வேண்டும் என, சங்கத்தின் செயலர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது.
செங்கல்பட்டு மண்டலத்தில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலர்கள் பணித் திறனாய்வு கூட்டம், மண்டல இணை பதிவாளர் நந்தகுமார் தலைமையில், செங்கல்பட்டு மண்டல அலுவலகத்தில் நேற்று முன்தினம் நடந்தது.
இந்த கூட்டத்தில், காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் கூடுதல் பதிவாளர் மற்றும் மேலாண்மை இயக்குனர் சிவமலர் பங்கேற்று பேசினார்.
அப்போது,'கடன் வழங்குதல், கடன் வசூல் செய்தல், அரசு திட்டமான 'டாப்செட்கோ, டாம்கோ, தாட்கோ' போன்ற திட்டங்களில், பயனாளிகளுக்கு உடனுக்குடன் கடன் வழங்க வேண்டும் என, கூட்டுறவு கடன் சங்க செயலர்களுக்கு உத்தரவிட்டார்.
இந்த கூட்டத்தில், சரக துணை பதிவாளர்கள் செங்கல்பட்டு உமாசங்கரி, செல்வி, பொது விநியோக திட்டம் துணை பதிவாளர் சாவித்திரி, டான்பெட் மண்டல மேலாளர் மற்றும் துணை பதிவாளர் ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
இதைத்தொடர்ந்து, 2024 - 25ம் ஆண்டிற்கான பயிர்க்கடன், மகளிர் சுய உதவிக்குழு கடன், தான்ய ஈடு கடன் போன்ற கடன்கள் இலக்கை முழுமையாக செயல்படுத்திய தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களின் செயலர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன.