/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி கூட்டத்தை புறக்கணித்த ஒருங்கிணைப்பாளர்கள்
/
தி.மு.க., ஓட்டுச்சாவடி கூட்டத்தை புறக்கணித்த ஒருங்கிணைப்பாளர்கள்
தி.மு.க., ஓட்டுச்சாவடி கூட்டத்தை புறக்கணித்த ஒருங்கிணைப்பாளர்கள்
தி.மு.க., ஓட்டுச்சாவடி கூட்டத்தை புறக்கணித்த ஒருங்கிணைப்பாளர்கள்
ADDED : மே 27, 2025 12:10 AM
திருக்கழுக்குன்றம்,
தி.மு.க., காஞ்சி வடக்கு மாவட்டம் சார்பில் ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம், பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுக்குன்றம் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம், திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றியம் மற்றும் பேரூர் தி.மு.க., சார்பில், ஓட்டுச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
இதில், ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் செல்வக்குமார், ரமேஷ், தனசேகரன், சேகர், பூபதி ஆகியோர் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து விசாரித்தபோது, சரியான மரியாதை கொடுக்கவில்லை, முறையாக அழைப்பு விடுக்கவில்லை, கடந்த உட்கட்சி தேர்தலில் முன்விரோதம் என, பல காரணங்கள் கூறப்பட்டன.
இந்த நிலை நீடித்தால், தொடர்ந்து நான்கு சட்டசபை தேர்தலிலும் பின்னடைவை சந்தித்து வரும் திருக்கழுக்குன்றம் வடக்கு ஒன்றிய தி.மு.க., இந்த முறையும் அதல பாதாளத்திற்குச் செல்லும் என்பது உறுதி.
இதனால், தி.மு.க.,வின் வெற்றி, திருப்போரூர் தொகுதியில் பாதிக்கப்படுவது உறுதி என, கூட்டத்தை புறக்கணித்த ஓட்டுச்சாவடி ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்து உள்ளனர்.