/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
போந்துாரில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்
/
போந்துாரில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்
போந்துாரில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்
போந்துாரில் மின் கசிவால் குடிசை வீடு எரிந்து நாசம்
ADDED : ஜன 11, 2024 12:42 AM

சித்தாமூர்:சித்தாமூர் அருகே போந்துார் கிராமம், மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் விவசாயி பெருமாள், 65. குடிசை வீட்டில் வசித்து வந்த இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டில் உறங்கிக் கொண்டு இருந்தார்.
அப்போது, எதிர்பாராத விதமாக வீட்டில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக, இரவு 2:00 மணியளவில், குடிசையில் தீப்பற்றி எரியத் துவங்கி உள்ளது.
இதையறிந்த பெருமாள் மற்றும் அவரது குடும்பத்தினர், வீட்டை விட்டு வெளியேறி, செய்யூர் தீயணைப்புத் துறைக்கு தகவல் அளித்தனர்.
பின், வீட்டில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முயன்றனர். தீயணைப்புத் துறையினர் வந்து தீயை அணைப்பதற்குள், வீடு முற்றிலும் எரிந்து நாசமானது.
இந்த விபத்தில், வீடு கட்டுவதற்காக பீரோவில் வைத்திருந்த 5 லட்சம் ரூபாய் தீயில் எரிந்து விட்டதாக, பெருமாள் கூறினார்.