/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
நகராட்சி இடத்தை மீட்பதில் மெத்தனம் அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றச்சாட்டு
/
நகராட்சி இடத்தை மீட்பதில் மெத்தனம் அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றச்சாட்டு
நகராட்சி இடத்தை மீட்பதில் மெத்தனம் அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றச்சாட்டு
நகராட்சி இடத்தை மீட்பதில் மெத்தனம் அதிகாரிகள் மீது கவுன்சிலர் குற்றச்சாட்டு
ADDED : ஜன 10, 2025 10:04 PM
செங்கல்பட்டு:நகராட்சி பகுதியில் உள்ள ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்ய, சர்வேயர் இழுத்தடிப்பதாக, தி.மு.க., பெண் கவுன்சிலர் ஆவேசமாக பேசினார்.
செங்கல்பட்டு நகராட்சியின் சாதாரண கூட்டம், நகரமன்ற தலைவர் தேன்மொழி தலைமையில், நேற்று நடந்தது. நகராட்சி ஆண்டவன் மற்றும் அதிகாரிகள், கவுன்சிலர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்தில், கவுன்சிலர்கள் பேசியதாவது:
* ரமேஷ், தி.மு.க., 16வது வார்டு:
நகரில் அதிகரித்துள்ள தெரு நாய்களை கட்டுப்படுத்த வேண்டும். சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் விபத்துக்கள் ஏற்படுகின்றன. இதுதொடர்பாக, இரண்டரை ஆண்டுகளாக கூறி வருகிறேன். நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. நாய்களுக்கு கருத்தடைக்கூடம் அமைக்கும் பணி துவக்கப்படாமல் உள்ளது.
நகரமன்ற தலைவர் தேன்மொழி:
நாய்களுக்கு கருத்தடைக்கூடம் அமைக்கும் பணி துவங்கி நடைபெற்று வருகிறது. நாய்கள் மற்றும் மாடுகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
* சந்தியா, தி.மு.க., 12வது வார்டு:
நகராட்சிக்குச் சொந்தமான இடம் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை மீட்க வேண்டும் என, தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன். சர்வேயர் இல்லை என்றால், கலெக்டரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். சர்வேயர் தனியார் இடங்களை அளப்பதற்கு மட்மே ஆர்வம் காட்டுகிறார்.
* நகர திட்ட அலுவலர்:
ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தை சர்வேயர் அளவீடு செய்த பிறகு, ஆக்கிரமிப்பு அகற்றப்படும்.
இவ்வாறு, விவதாம் நடந்தது.