/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேலமையூரில் சிறுபாலங்கள் அமைக்க குறைதீர் கூட்டத்தில் கவுன்சிலர் மனு
/
மேலமையூரில் சிறுபாலங்கள் அமைக்க குறைதீர் கூட்டத்தில் கவுன்சிலர் மனு
மேலமையூரில் சிறுபாலங்கள் அமைக்க குறைதீர் கூட்டத்தில் கவுன்சிலர் மனு
மேலமையூரில் சிறுபாலங்கள் அமைக்க குறைதீர் கூட்டத்தில் கவுன்சிலர் மனு
ADDED : பிப் 27, 2024 10:53 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு அடுத்த மேலமையூர் பிரதான சாலையில், சிறுபாலங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில், இரண்டு சிறுபாலங்கள் பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டன. தற்போது, பாலங்கள் வலுவிழந்து சேதமடைந்துள்ளன.
இந்த பாலங்கள் உள்ள கால்வாய் வழியாக, மேலமையூர், சக்தி நகர், லட்சுமி நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் மழைநீர், கழிவுநீர் மற்றும் ஆலப்பாக்கம் ஏரி உபரி நீர் செல்கிறது. பாலங்கள் சேதமடைந்து அடைத்துள்ளதால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி நிற்கிறது.
இதனால், பகுதிவாசிகளுக்கு தொற்று நோய் ஏற்படும் சூழல் உள்ளது.
இதனை தவிர்க்க, சிறுபாலங்கள் கட்டித்தர வேண்டும் என, நெடுஞ்சாலைத்துறை அதிகாரியிடம், பொதுமக்கள் மற்றும் ஆலப்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர் மனு அளித்தனர்.
இந்த மனு மீது நடவடிக்கை இல்லாமல் கிடப்பில் போடப்பட்டுஉள்ளது.
தொடர்ந்து, மேலமையூர் பிரதான சாலையில், சிறுபாலங்கள் கட்ட வேண்டும் என, செங்கல்பட்டு மக்கள் குறை தீர்க்கும் கூட்டத்தில், ஆலப்பாக்கம் ஊராட்சி வார்டு உறுப்பினர் சந்திரகாந்த், கலெக்டரின் நேர்முக உதவியாளரிடம் மனு அளித்தார்.
மனுவை பெற்றுக்கொண்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் அறிவுடை நம்பி, நெடுஞ்சாலைத்துறைக்கு பரிந்துரை செய்து, நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

