/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் செங்கையில் நீதிமன்ற புறக்கணிப்பு
/
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் செங்கையில் நீதிமன்ற புறக்கணிப்பு
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் செங்கையில் நீதிமன்ற புறக்கணிப்பு
வழக்கறிஞர் தாக்கப்பட்ட விவகாரம் செங்கையில் நீதிமன்ற புறக்கணிப்பு
ADDED : நவ 22, 2024 12:26 AM

செங்கல்பட்டு:ஓசூரில் வழக்கறிஞர் ஒருவரை அரிவாளால் வெட்டி கொலை செய்ய முயன்றதை கண்டித்து, செங்கல்பட்டு நீதிமன்றங்களை வழக்கறிஞர்கள் புறக்கணித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த கண்ணன், 50, என்ற வழக்கறிஞரை, நீதிமன்ற வாசலிலேயே, நேற்று முன்தினம் வாலிபர் ஒருவர் சரமாரியாக வெட்டினார்.
இச்சம்பவத்தை கண்டித்து, செங்கல்பட்டு பார் அசோசியேஷன், அட்வகேட் அசோசியேஷன் ஆகிய சங்கத்தினர், செங்கல்பட்டு முதன்மை மாவட்ட நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களை புறக்கணித்து, நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். நாளையும் நீதிமன்ற புறக்கணிப்பில், வழக்கறிஞர்கள் ஈடுபடுகின்றனர்.
இதே சம்பவத்தை கண்டித்து, நீதிமன்ற வளாகம் முன், செங்கல்பட்டு - மதுராந்தகம் சாலையில் அமர்ந்து, வழக்கறிஞர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வழக்கறிஞர் மீதான தாக்குதலை கண்டித்தும், பிற மாநிலங்களில் உள்ள வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டத்தை உடனடியாக அமல்படுத்த கோரிக்கையும், நுாற்றுக்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கோஷங்களை எழுப்பினர். இதனால், மதுராந்தகம் - செங்கல்பட்டு சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
திருப்போரூர் மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்தில், 30க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
இதில், நீதிமன்றத்தின் முன், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும். வழக்கறிஞர்களுக்கு கைத்துப்பாக்கி வழங்க வேண்டும்.
தொடர்புடைய குற்றவாளி தண்டிக்கப்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோஷங்களை, வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தின் போது எழுப்பினர்.