/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
/
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
ஆக்கிரமிப்பை அகற்றாத அதிகாரிகள் நேரில் ஆஜராக கோர்ட் உத்தரவு
ADDED : டிச 19, 2024 08:54 PM
கூடுவாஞ்சேரி:நந்திவரம் - கூடுவாஞ்சேரி நகராட்சி, 21வது வார்டுக்கு உட்பட்ட பாரி தெரு, என்.எஸ்.கே.தெருவிலுள்ள கழிவுநீர் கால்வாய் மற்றும் மழைநீர் கால்வாயை ஆக்கிரமித்து, வீடுகள் மற்றும் கடைகள் கட்டப்பட்டுள்ளன.
இவ்விரு தெருக்களின் அருகில், இரண்டு அரசு பள்ளிகள் உள்ளன.
பள்ளி செல்லும் மாணவர்கள் இந்த சாலையைக் கடந்து செல்லும் போது, கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதுகுறித்து நம் நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியாக, மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி துவங்கி, பாதியில் நின்றது.
அப்பகுதிவாசிகள் இணைந்து நகராட்சி கமிஷனர், வண்டலுார் தாசில்தார் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு புகார் மனு அளித்தும், ஆக்கிரமிப்புகளை அகற்றவில்லை.
இதையடுத்து நந்திவரம், கிருஷ்ணாபுரத்தைச் சேர்ந்த சரவணாகுமார், 33, என்பவர், ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மெத்தனமாக செயல்படுவதாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
நேற்று இந்த வழக்கு, நீதிபதிகள் சந்தர் மற்றும் தனபால் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் மெத்தனமாக செயல்பட்ட மாவட்ட கலெக்டர், தாசில்தார், நகராட்சி கமிஷனர், கிராம நிர்வாக அதிகாரி, ஆக்கிரமிப்பாளர் கிரிஜா ஆகியோரை நேரில் ஆஜராக, நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.
இதைத் தொடர்ந்து, கிராம நிர்வாக அதிகாரி உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று, ஆக்கிரமிப்பு இடத்தை அளவீடு செய்து விட்டுச் சென்றுள்ளனர். இதனால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது.