sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

செங்கல்பட்டு

/

கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்...வேதனை!:ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி

/

கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்...வேதனை!:ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி

கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்...வேதனை!:ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி

கஷ்டப்படும் பெற்றோரை சுட்டிக்காட்டி கோர்ட்...வேதனை!:ரகளை, அடிதடி மாணவர்கள் மீது கடும் அதிருப்தி


ADDED : நவ 23, 2024 01:18 AM

Google News

ADDED : நவ 23, 2024 01:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னை: 'குற்றச் சம்பவங்களில் ஈடுபட்ட மாணவர்களின் பெற்றோர், வீட்டு வேலை செய்து, அவர்களை படிக்க அனுப்புகின்றனர். அப்படி இருந்தும், அவர்கள் கல்லுாரிக்குகூட செல்லாமல், அடிதடியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது' என, சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம், பொன்பாடி பகுதியைச் சேர்ந்த ஆனந்தன் என்பவரின் மகன் சுந்தர். சென்னை மாநில கல்லுாரியில், பி.ஏ., அரசியல் முதலாம் ஆண்டு படித்து வந்த இவர், கடந்த மாதம் 4ல், சென்ட்ரல் ரயில் நிலையத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்களால் சரமாரியாக தாக்கப்பட்டார்.

ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சுந்தர், கடந்த மாதம் 9ல் உயிரிழந்தார்.

இந்த சம்பவத்தில், பச்சையப்பன் கல்லுாரி மாணவர்கள் ஏழு பேரை கைது செய்த பெரியமேடு போலீசார், கொலை வழக்கு பதிவு செய்தனர்.

இவர்களில், ஈஸ்வரன், ஈஸ்வர், யுவராஜ் மற்றும் சந்துரு ஆகியோர், ஜாமின் கேட்டு, சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனு, நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா, நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, எஸ்.எப்.ஐ., எனும் இந்திய மாணவர் சங்கம், சட்ட பஞ்சாயத்து இயக்கம் சார்பில், மாணவர்களுக்கு இடையேயான ஒற்றுமை வழங்குவது குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை வழங்கினர்.

அப்போது, காவல் துறை தரப்பில் கூடுதல் அரசு வழக்கறிஞர் அருள் செல்வம் ஆஜராகி, ''மாணவர்கள் மோதல் சம்பவங்கள் தொடர்பாக, பல்வேறு காவல் நிலையங்களில் 22 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளன.

''காவல் துறை மற்றும் ரயில் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், அதன் தற்போதைய நிலை பற்றிய முழு விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும்,'' என்றார்.

அப்போது குறுக்கிட்டு நீதிபதி கூறியதாவது:

குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் அதிகப்படியான மாணவர்களின் பெற்றோர், வீட்டு வேலை செய்கின்றனர்.

வீட்டு வேலை செய்து தங்கள் பிள்ளைகளை படிக்க அனுப்புகின்றனர். அப்படி இருந்தும், கல்லுாரிக்கு கூட செல்லாமல் அடிதடியில் ஈடுபடுவது வேதனை அளிக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, இந்த வழக்கில் உயர்கல்வித் துறை செயலரை சேர்க்கவும், மாணவர்களுக்கு இடையேயான மோதல் சம்பவம் தொடர்பாக, காவல் துறை மற்றும் ரயில் போலீசாரால் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விபரங்களை தாக்கல் செய்ய அவகாசம் அளித்தும், அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவிட்டு, விசாரணையை வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

நடத்துனர், ஓட்டுனர்கள் திடீர் போராட்டம்


பூந்தமல்லியில் இருந்து சுங்குவார்சத்திரம் நோக்கி, நேற்று காலை 9:30 மணிக்கு, தடம் எண்: 578 என்ற அரசு பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. பேருந்தில், பள்ளி மாணவ - மாணவியர் பலர் படியில் தொங்கியபடி பயணித்தனர்.படியில் நின்றிருந்த மாணவர்களை, பேருந்தினுள் ஏறும்படி, நடத்துனர் நாராணயணசாமி எச்சரித்து வந்துள்ளார்.பேருந்து, இருங்காட்டுக்கோட்டை அருகே சென்றபோது, படியில் இருந்த மாணவரை உள்ளே செல்லுமாறு, நடத்துனர் நாராயணசாமி கண்டித்துள்ளார்.
அப்போது, அங்கிருந்த 42 வயதுடைய நபர், நடத்துனரை கடுமையாக தாக்கி, அங்கிருந்து தப்பி ஓடினார். இதையடுத்து, பேருந்தை நிறுத்தி, நடத்துனர், ஓட்டுனர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னால் வந்த அரசு மாநகர பேருந்து ஓட்டுனர்களும், பேருந்துகளை நிறுத்தி, போராட்டத்தில் குதித்தனர். இதனால், அப்பகுதி பரபரப்பானது. தேசிய நெடுஞ்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.தகவலறிந்த ஸ்ரீபெரும்புதுார் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து, நடத்துனர் மற்றும் ஓட்டுனர்களிடம் பேச்சு நடத்தினர்.இதையடுத்து, அரை மணி நேரத்திற்கு மேலாக நீடித்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மற்ற பேருந்துகள் புறப்பட்டு சென்றன.
பாதிக்கப்பட்ட நடத்துனர் நாராயணசாமி, பேருந்துடன் சென்று ஸ்ரீபெரும்புதுார் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். பயணியர், மாற்று பேருந்தில் சுங்குவார்சத்திரத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.ஸ்ரீபெரும்புதுார் அரசு மருத்துமனையில் நாராயணசாமி சிகிச்சை பெற்று வருகிறார். 42 வயதுடைய நபரை பிடித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.அதேபோல், பிராட்வேயில் இருந்து கண்ணதாசன் நகருக்கு புறப்பட்ட தடம் எண்: '33சி' அரசு பேருந்தில், மூன்று வாலிபர்கள் நேற்று முன்தினம் இரவு ஏறினர்.ஏறியதில் இருந்து பயணியருக்கு தொந்தரவாக பாட்டு பாடி, கூரையை தட்டியபடி வந்தனர்.
பேருந்து ஓட்டுனர் கணேசன், 58, அறிவுரை வழங்கியும், அந்த மூன்று பேரும் அட்டகாசத்தை தொடர்ந்து செய்து வந்தனர்.வாலிபர்கள் சேட்டை குறித்து, ஓட்டுனர் கணேசன், அப்பகுதி போலீசாருக்கு மொபைல் போனில் தகவல் அளித்தார்.ரோந்து பணியில் இருந்த போலீசார், உடனே பிராட்வே நிலையத்திற்கு வந்து, மூவரையும் எச்சரித்து, பேருந்தில் இருந்து இறக்கிவிட்டனர். இதையடுத்து, பேருந்து புறப்பட்டு சென்று கொண்டிருந்தது.
வியாசர்பாடி, முல்லை நகர் நிறுத்தத்தில் மாநகர பேருந்து நிற்கும்போது, பின்னால் தொடர்ந்து வந்த அந்த மூவரும், பேருந்தினுள் ஏறி கணேசனை சரமாரியாக கையால் தாக்கி தப்பினர்.இது குறித்து எம்.கே.பி.நகர் போலீசார், நேற்று வழக்கு பதிந்து, வியாசர்பாடி, எம்.ஜி.ஆர்.நகர், 1வது தெருவைச் சேர்ந்த ராகேஷ், 18, கொடுங்கையூர், சஞ்சய்காந்தி நகரை சேர்ந்த நாராயணன், 18, கொடுங்கையூர், திருவள்ளூர் நகரை சேர்ந்த அய்யனார், 20, ஆகிய மூவரையும் கைது செய்தனர்.








      Dinamalar
      Follow us