/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மின்சாரம் பாய்ந்து பசுவும் கன்றும் பலி
/
மின்சாரம் பாய்ந்து பசுவும் கன்றும் பலி
ADDED : டிச 13, 2024 02:08 AM

பவுஞ்சூர்:பவுஞ்சூர் அடுத்த தண்டலம் கிராமத்தைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி; விவசாயி.
நேற்று காலை இவர், தன் மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
அப்போது, தண்டலம் கிராமம், மனோகரன் என்பவருக்குச் சொந்தமான வயல்வெளியில், மின் மோட்டாருக்கு மின் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த, உயரழுத்த மின்கம்பிகள் அறுந்து கீழே கிடந்துள்ளன.
மாடுகள் கீழே கிடந்த மின்கம்பிகள் மீது கால் வைத்த போது, மின்சாரம் பாய்ந்துள்ளது. இதில், பசு மற்றும் அதன் கன்று என, இரண்டு மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தன.
இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர், வருவாய்த் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினருக்கு தகவல் அளித்தனர். உடனே, மின்சாரம் நிறுத்தப்பட்டது.

