/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு பலி
/
சித்தாமூர் அருகே மின்சாரம் பாய்ந்து பசு பலி
ADDED : நவ 06, 2025 11:44 PM
சித்தாமூர்: சித்தாமூர் அருகே ஒரங்காவலி கிராமத்தில், மேய்ச்சலுக்குச் சென்ற பசு மீது, கீழே அறுந்து கிடந்த மின்கம்பி உரசி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது.
சித்தாமூர் அடுத்த ஒரங்காவலி கிராமத்தைச் சேர்ந்தவர் மாரிமுத்து 50; விவசாயி.
கால்நடை வளர்ப்பிலும் ஈடுபட்டு வரும் இவர், நேற்று காலை 10:00 மணியளவில், 10க்கும் மேற்பட்ட மாடுகளை மேய்ச்சலுக்கு அழைத்துச் சென்றார்.
அங்குள்ள மயானம் அருகே, மின்மோட்டார்களுக்கு மின்சாரம் வினியோகம் செய்ய அமைக்கப்பட்டு இருந்த உயரழுத்த மின்கம்பிகள், அறுந்து கிடந்துள்ளன.
அப்போது, மேய்ச்சலுக்குச் சென்ற பசு ஒன்றின் மீது, அறுந்து கிடந்த மின்கம்பிகள் உரசியுள்ளன. இதில் மின்சாரம் பாய்ந்து, சம்பவ இடத்திலேயே பசு உயிரிழந்தது.
மற்ற மாடுகள் அலறி ஓடி உயிர் தப்பின.
பின், இதுகுறித்து வருவாய்த் துறையினர் மற்றும் மின்சாரத் துறையினருக்கு மாரிமுத்து தகவல் அளித்ததும், மின்சாரம் நிறுத்தப்பட்டு மின்கம்பிகள் சீரமைக்கப்பட்டன.
உயிரிழந்த பசு, அரசு கால்நடை மருத்துவர்களால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இந்த விபத்து குறித்து, சித்தாமூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

