/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்
/
பீரோவில் இருந்த ரூ.3 லட்சம் மாயம்
ADDED : நவ 06, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னை:கிழக்கு தாம்பரத்தில், பீரோவில் இருந்த 3 லட்சம் ரூபாய் மாயமானது குறித்து, போலீசார் விசாரிக்கின்றனர்.
கிழக்கு தாம்பரம், அண்ணாதுரை தெருவைச் சேர்ந்தவர் விமலா, 40; வீட்டு வேலை செய்து வருகிறார். நவ., 4ம் தேதி, வீட்டு பீரோவில், 3 லட்சம் ரூபாய் வைத்திருந்தார்.
நேற்று காலை, பீரோவை திறந்து பார்த்த போது, உள்ளே வைத்திருந்த பணம் மாயமானதை கண்டு, விமலா அதிர்ச்சியடைந்தார். பீரோ முழுதும் தேடியும் கிடைக்காததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தார்.
இதுகுறித்து, சேலையூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

