/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையில் உறங்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
/
சாலையில் உறங்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
சாலையில் உறங்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
சாலையில் உறங்கும் மாடுகள் விபத்தில் சிக்கும் வாகனங்கள்
ADDED : பிப் 09, 2024 10:13 PM

மறைமலை நகர்:காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சியில், 50,000த்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு உள்ள பஜாருக்கு, சுற்றியுள்ள 15க்கும் மேற்பட்ட கிராம மக்கள் வந்து செல்கின்றனர்.
இங்கு உள்ள தெருக்கள், நெடுஞ்சாலைகளில் மாடுகள் சுதந்திரமாக உலா வருகின்றன.
குறிப்பாக, சென்னை --- திருச்சி தேசிய நெடுஞ்சாலையின் நடுவே படுத்து உறங்குகின்றன.
இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் அபாயம் உள்ளது. சாலையில் உலா வரும் மாடுகளை பிடிக்க, ஊராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டி வருகிறது.
இதனால், அடிக்கடி இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. எனவே, மாடுகளை பிடிக்க, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.