/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சரக்கு வாகனங்கள் கவிழ்ந்து விபத்து
/
சரக்கு வாகனங்கள் கவிழ்ந்து விபத்து
ADDED : பிப் 10, 2025 11:42 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மறைமலை நகர் மதுரையில் இருந்து காலி பீர் பாட்டில்களை ஏற்றிக்கொண்டு 'ஈச்சர்' சரக்கு வாகனம் சென்னை நோக்கி வந்து கொண்டிருந்தது. புளியங்குளம் பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவர் ஓட்டினார்.
நேற்று அதிகாலை செங்கல்பட்டு அடுத்த பழவேலி அருகில் ஜி.எஸ்.டி., சாலையில் சென்னை மார்க்கத்தில் வந்து கொண்டிருந்த போது சத்தியமங்கலத்தில் இருந்து கோயம்பேடுக்கு செவ்வாழை பழம் ஏற்றி வந்த மற்றொரு 'ஈச்சர்' வாகனம் மோதியதில் இரண்டு வாகனங்களும் கட்டுப்பாட்டை இழந்து சாலை ஓர பள்ளத்தில் கவிழ்ந்தன.
டிரைவர் இருவரும் காயமின்றி தப்பினர். செங்கல்பட்டு தாலுகா போலீசார் விபத்து குறித்து விசாரிக்கின்றனர்.

