/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
'சைபர்' திருட்டு: ரூ.2 லட்சம் இழந்த பெண்
/
'சைபர்' திருட்டு: ரூ.2 லட்சம் இழந்த பெண்
ADDED : செப் 28, 2024 04:33 AM
சென்னை: சென்னை வில்லிவாக்கம், வடக்கு ஜெகன்நாதன் நகரைச் சேர்ந்தவர் மீனாட்சி தேவி, 38; இல்லத்தரசி. கடந்த 23ம் தேதி காலை, இவரை மொபைல் போனில் தொடர்பு கொண்ட நபர் பேசியுள்ளதாவது:
மும்பையில் இருந்து சைபர் கிரைம் இன்ஸ்பெக்டர் பேசுகிறேன்; உங்கள் பெயரில் கூரியர் ஒன்று, மும்பையில் இருந்து ஈரான் செல்ல பதிவு செய்யப்பட்டுள்ளது.
அதில் நான்கு ஈரானிய பாஸ்வேர்டுகள், ஒரு மடிக்கணினி, 3 கிலோ துணிமணிகள், எம்.ஏ.எம்.டி., எனும் 450 கிராம் போதை பொருட்கள் உள்ளன. இதற்கு, உங்கள் டெபிட் கார்டு வாயிலாக 93,000 ரூபாய் கட்டியுள்ளீர்கள்.
இது நீங்கள் தானா இல்லையா என்பதை சோதிக்க வேண்டும். நீங்கள் இல்லையென்றால், உங்கள் வங்கி கணக்கில் இருந்து, நான் தரும் வங்கி கணக்கிற்கு 1 லட்சம் ரூபாய் வீதம், இரண்டு முறை அனுப்புங்கள்.
சரிபார்த்த பின், உங்கள்பணம் மீண்டும் உங்களுக்கு கிடைக்கும்.
இவ்வாறு பேசியுள்ளார்.
இதை உண்மை என நம்பிய மீனாட்சி தேவி, மிரட்டலுக்கு பயந்து குறிப்பிட்ட இரண்டு வங்கி கணக்கிற்கு, ஒரு லட்சம் ரூபாய் வீதம், இரண்டு முறை அனுப்பியுள்ளார்.
அதன் பின், அப்பணம் திருப்பி வரவில்லை. தாம் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மீனாட்சி தேவி, இது குறித்து ராஜமங்கலம் போலீசில் புகார் அளித்துள்ளார்.