/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து பணம் பறிக்க முயலும் சைபர் குற்றவாளிகள்
/
தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து பணம் பறிக்க முயலும் சைபர் குற்றவாளிகள்
தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து பணம் பறிக்க முயலும் சைபர் குற்றவாளிகள்
தனியாக வசிக்கும் முதியோரை குறிவைத்து பணம் பறிக்க முயலும் சைபர் குற்றவாளிகள்
ADDED : நவ 25, 2024 02:00 AM

கூடுவாஞ்சேரி:ஊரப்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் ஆனந்தி, 66. சமூக ஆர்வலரான இவர், பா.ஜ., மகளிர் அணி நிர்வாகியாகவும் உள்ளார்.
இவரது வாட்ஸாப் எண்ணுக்கு, நேற்று முன்தினம் முதல், சி.பி.ஐ., போலீசார் அலுவலகத்தில் இருந்து பேசுவதாகவும், பணம் கேட்டு மிரட்டுவதாகவும் தெரிவித்தார்.
காவல் நிலையத்தில் புகார் அளித்தும், மோசடி பேர்வழிகளிடம் கவனமாக இருக்கும்படி அறிவுரை கூறி அனுப்பிவிட்டதாகவும் கூறினார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியதாவது:
எனது வாட்ஸாப் எண்ணுக்கு, வீடியோ காலில் வந்த நபர், தன்னை சி.பி.ஐ., அதிகாரி என அறிமுகப்படுத்திக்கொண்டு, என் வங்கி கணக்கில் அளவுக்கு அதிகமாக பணப்பரிமாற்றம் நடந்துள்ளதாகவும், அது தொடர்பாக கைது செய்ய இருப்பதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமின்றி, அது தொடர்பாக, அரசு முத்திரையுடன் கையெழுத்திட்டு, கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்தார். மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் உள்ள காவல் நிலையத்தில் இருந்து பேசுவதாக தெரிவித்தார்.
என் வங்கி கணக்குகள் பற்றிய விபரங்களைக் கூறி, ஒரே ஆண்டில் 10 கோடிக்கு மேல் பணப்பரிவர்த்தனை செய்துள்ளதாகவும், அதனால், 24 மணி நேரத்திற்குள் கைது செய்ய இருப்பதாகவும் மிரட்டினார்.
அதன்பின், என் வங்கி கணக்குகள், டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு போன்றவற்றின் விபரங்களை கேட்டு, தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார்.
நான் அவர்களுக்கு எந்தவிதமான தகவலும் கொடுக்கவில்லை. இது தொடர்பாக, போலீசாருக்கு தகவல் தெரிவித்தேன். அவர்கள், வங்கி கணக்கு தொடர்பாக எந்தவிதமான ஆவணங்களையும் அவர்களுக்கு வழங்க வேண்டாம். இது, போலியாக மிரட்டி பணம் பறிக்கும் மோசடி கும்பல் என தெரிவித்தனர்.
நான் அவர்களுக்கு எந்தவிதமான தகவலையும் சொல்லாததால், தொடர்ந்து தொந்தரவு செய்து வருகிறார். இது போன்ற மொசடி பேர்வழிகளை கண்டுபிடித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.