/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பாலாற்றுப்படுகை விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடியில் தீவிரம்
/
பாலாற்றுப்படுகை விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடியில் தீவிரம்
பாலாற்றுப்படுகை விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடியில் தீவிரம்
பாலாற்றுப்படுகை விவசாயிகள் வேர்க்கடலை சாகுபடியில் தீவிரம்
ADDED : பிப் 22, 2024 10:29 PM

மாமல்லபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில், விவசாயம் முக்கியத் தொழிலாக விளங்கி வருகிறது. நெல், கேழ்வரகு, எள், வேர்க்கடலை என பயிரிட்டு, விவசாயிகள் சாகுபடி செய்து வருகின்றனர்.
இந்நிலையில், பாலாற்றுப்படுகை பகுதிகளில் வேர்க்கடலை பயிரிடப்படுவது குறிப்பிடத்தக்கது.
ஆற்றுப்படுகை கடந்து செல்லும் திருக்கழுக்குன்றம், மதுராந்தகம், செய்யூர் வட்டார பகுதிகளில் மண், ஆற்று நீராதார வளம் மிகுந்துள்ள நிலையில், விவசாயிகள் வேர்க்கடலை பயிரிடுவதில் ஆர்வம் காட்டுகின்றனர்.
தற்போதும், கடந்த டிச., மாதம் வேர்க்கடலை விதைத்து, கொடிகள் தழைத்துள்ளது. ஆற்று முகத்துவார பகுதியான கடலுார் துவங்கி, பல பகுதிகளிலும் பயிரிடப்பட்டுள்ளது.
இப்பகுதி வேர்க்கடலை, அளவில் பெரிதாகவும், சுவை மிக்கதாகவும் உள்ளதால், பர்பி, எண்ணெய் உள்ளிட்டவை தயாரிக்க உகந்ததாக இருப்பதால், வியாபாரிகள் விரும்பி வாங்கிச் செல்கின்றனர்.
இதனால், இப்பகுதி விவசாயிகளுக்கும் கணிசமான வருவாய் கிடைத்து வருகிறது.