/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி கீழக்கரணையில் விபத்து அபாயம்
/
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி கீழக்கரணையில் விபத்து அபாயம்
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி கீழக்கரணையில் விபத்து அபாயம்
பழுதடைந்த நீர்த்தேக்க தொட்டி கீழக்கரணையில் விபத்து அபாயம்
ADDED : பிப் 18, 2025 05:44 AM

மறைமலைநகர்: மறைமலைநகர் நகராட்சி 17வது வார்டு கீழக்கரணை பகுதியில், 1,000க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.
இங்குள்ள சிப்காட் பகுதியில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த மக்கள், அதிக அளவில் வாடகைக்கு வசித்து வருகின்றனர்.
இங்கு நியாய விலைக் கடை எதிரில், 30 ஆண்டுகளுக்கு முன் இப்பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக, 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு, குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பழுதடைந்தது. இதையடுத்து, மாற்று வழிகளில் தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.
தற்போது நீர்த்தேக்க தொட்டியில் சிமென்ட் பூச்சு உதிர்ந்து, வலுவிழந்து எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் ஆபத்தான நிலையில் உள்ளது.
இதுகுறித்து, அப்பகுதிவாசிகள் கூறியதாவது:
குடியிருப்புகளுக்கு இடையே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி உள்ளது. இதன் அருகிலேயே அரசு பள்ளி செயல்பட்டு வருகிறது.
ஆபத்தான நீர்த்தேக்க தொட்டியை இடிக்க வேண்டும் என, 2023ம் ஆண்டு நகராட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஏதேனும் அசம்பாவிதம் நடைபெறும் முன், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அகற்ற, நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

