/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேம்புலிபுரம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
/
சேம்புலிபுரம் சாலை சேதம் வாகன ஓட்டிகள் தடுமாற்றம்
ADDED : மே 20, 2025 12:33 AM

செய்யூர், சேம்புலிபுரத்தில், சாலை கடுமையாக சேதமடைந்து பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால், வாகன ஓட்டிகள் சிரமப்படுகின்றனர்.
செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் அருகே இடைக்கழிநாடு பேரூராட்சி, 10வது வார்டுக்கு உட்பட்ட சேம்புலிபுரம் கிராமத்தில், 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
சேம்புலிபுரம் கிராமத்தில் இருந்து, கிழக்கு கடற்கரை சாலையை இணைக்கும், பச்சைவாழியம்மன் கோவில் தெரு சாலை உள்ளது.
இச்சாலையை சேம்புலிபுரம், கோவைப்பாக்கம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்கள் பயன்படுத்துகின்றனர்.
கடந்த ஐந்து ஆண்டுகளாக ஜல்லிகள் பெயர்ந்து, ஆங்காங்கே இச்சாலையில் பள்ளங்கள் ஏற்பட்டு உள்ளன.
இதனால், இரவு நேரத்தில் இந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், தடுமாறி விழுந்து காயமடைகின்றனர்.
மேலும், தற்போது பெய்த மழைக்கு சாலையில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி, இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.
பேரூராட்சி அதிகாரிகள் ஆய்வு செய்து, இந்த சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.