/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தண்டரை ரேஷன் கடை சேதம் உணவு பொருள் வீணாகும் அவலம்
/
தண்டரை ரேஷன் கடை சேதம் உணவு பொருள் வீணாகும் அவலம்
ADDED : ஜன 27, 2025 11:16 PM

பவுஞ்சூர், பவுஞ்சூர் அருகே தண்டரை கிராமத்தில், 500க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
கீழ்நீர்பள்ளம் பகுதியில் நியாய விலைக் கடை செயல்பட்டு வருகிறது. இதில், 200க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் பயனடைகின்றனர்.
இந்த நியாய விலைக் கடை, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது.
முறையான பராமரிப்பின்றி, கட்டடம் நாளடைவில் பழுதடைந்து, சுவர் மற்றும் மேல்தளத்தில் விரிசல் ஏற்பட்டு, சிமென்ட் கலவை உதிர்ந்துள்ளது.
இதனால் மழைக் காலத்தில் மேல் தளத்தில் தண்ணீர் பெருக்கெடுத்து அரிசி, சர்க்கரை, துவரம் பருப்பு போன்ற உணவு பொருட்கள் தண்ணீரில் நனைந்து வீணாகி வருகின்றன.
எனவே, துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பழுதடைந்த நியாய விலைக் கடை கட்டடத்தை அகற்றி, புதிய கட்டடம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.