/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த மின்கம்பத்தால் குடியிருப்பு பகுதியில் அபாயம்
/
சேதமடைந்த மின்கம்பத்தால் குடியிருப்பு பகுதியில் அபாயம்
சேதமடைந்த மின்கம்பத்தால் குடியிருப்பு பகுதியில் அபாயம்
சேதமடைந்த மின்கம்பத்தால் குடியிருப்பு பகுதியில் அபாயம்
ADDED : ஜூன் 08, 2025 01:46 AM

செய்யூர்:செய்யூர் அடுத்த வெடால் ஊராட்சியில் 600க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதிக்கு கடப்பாக்கம் துணை மின்பகிர்வு மனை மூலமாக மின்சாரம் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது.
கடப்பாக்கம் செல்லும் சாலையோரத்தில் வெடால் காலனி மயானத்திற்கு அருகே குடியிருப்புகளுக்கு மின்விநியோகம் செய்ய சாலை ஓரம் அமைக்கப்பட்டு உள்ள மின்கம்பம் சேதமடைந்து சிமென்ட் கலவை உதிர்ந்து இரும்பு கம்பிகள் வெளியே தெரிந்து எலும்பு கூடுபோல காட்சியளிக்கிறது. பலத்த காற்று வீசினால் மின்கம்பம் முறிந்து வாகன ஓட்டிகள் மற்றும் குடியிருப்புகள் மீது விழுந்து விபத்து ஏற்படும் அபாய நிலையில் உள்ளது.
மின்வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்து, விபத்து ஏற்படும் நிலையில் உள்ள மின்கம்பத்தை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கிராம மக்கள் எதிர்பார்கின்றனர்.