/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
ஆலத்துார் சிட்கோ நுழைவாயிலில் சேதமான சாலையால் அபாயம்
/
ஆலத்துார் சிட்கோ நுழைவாயிலில் சேதமான சாலையால் அபாயம்
ஆலத்துார் சிட்கோ நுழைவாயிலில் சேதமான சாலையால் அபாயம்
ஆலத்துார் சிட்கோ நுழைவாயிலில் சேதமான சாலையால் அபாயம்
ADDED : நவ 28, 2024 02:30 AM

திருப்போரூர், திருப்போரூர் அடுத்த ஆலத்துார் பகுதியில், கடந்த 1982ல், 400 ஏக்கர் பரப்பளவில், சிட்கோ தொழிற்பேட்டை ஏற்படுத்தப்பட்டது.
பழைய மாமல்லபுரம் சாலையை ஒட்டி இந்த தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டதால், குறுகிய காலத்திலேயே, 20க்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இங்கு வந்தன.
தற்போது, இத்தொழிற்பேட்டையில், 30 தொழிற்சாலைகள் செயல்படுகின்றன. 20,000த்திற்கும் மேற்பட்டோர் வேலை செய்கின்றனர். பழைய மாமல்லபுரம் சாலையிலிருந்து பிரிந்து செல்லும் சிட்கோ நுழைவாயில் சாலை சேதமடைந்துள்ளது.
இதனால், தொழிற்சாலைகளுக்கு வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் பள்ளத்தில் சிக்கி அவதிப்படுகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனங்களில் வரும் தொழிலாளர்கள், அதிக அளவில் விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, மேற்கண்ட சாலையை சீரமைக்க, சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சிட்கோ தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.