/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்
/
செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்
செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்
செங்கை பாலாற்றில் கொட்டப்படும் மருத்துவ கழிவுகளால் அபாயம்
ADDED : ஏப் 25, 2025 01:41 AM

செங்கல்பட்டு:பழவேலி பாலாற்றில், காலாவதியான மருந்துகளை கொட்டப்படுவதால், நீர்நிலை பாதிக்கப்படும் அபாயம் நிலவுகிறது.
செங்கல்பட்டு அடுத்த பழவேலி, திருச்சி -- சென்னை தேசிய நெடுஞ்சாலையை ஒட்டி, பாலாறு உள்ளது.
பாலாற்றங்கரை ஓரம் செங்கல்பட்டு நகராட்சி மற்றும் தனி நபர்கள் பிளாஸ்டிக் குப்பை, கழிவு பொருட்களை கொட்டி எரிப்பது தொடர்கதையாக உள்ளது.
இதன் காரணமாக சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதுடன், வாகன ஓட்டிகளும் கடும் அவதியடைந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த சில நாட்களாக இங்கு, காலாவதியான மருந்து, மாத்திரைகள் இரவு நேரங்களில் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன.
இதன் காரணமாக பொதுமக்கள் மற்றும் நீர்நிலைகளுக்கு கடும் பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது.
எனவே, மருத்துவ கழிவுகளை கொட்டுவோர் மீது மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.