/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து
/
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து
அதிக பாரம் ஏற்றிச்செல்லும் கல் குவாரி லாரிகளால் ஆபத்து
ADDED : மார் 19, 2024 09:45 PM
சித்தாமூர்:செய்யூர் சுற்றுவட்டார பகுதிகளான சித்தாமூர், பவுஞ்சூர், ஜமீன் எண்டத்துார், ஓணம்பாக்கம், நெல்வாய்பாளையம், ஆக்கினாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில், பல்வேறு கல் குவாரிகள் செயல்படுகின்றன.
கல் குவாரிகளில் இருந்து லாரிகள் வாயிலாக, ஜல்லி, எம் - -சாண்ட், பி - சாண்ட், கருங்கற்கள் போன்றவை கட்டுமானப் பணிகளுக்கு எடுத்துச் செல்லப்படுகின்றன.
அனுமதிக்கப்பட்ட அளவில் இருந்து, லாரிகள் வாயிலாக அதிகபடியான பாரங்கள் ஏற்றிச்செல்வது, சாலையில் செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.
மேலும், லாரியில் எடுத்துச் செல்லும் எம்- - சாண்ட் காற்றில் துாசு போல் பறக்கிறது. அதனால், லாரிகளை பின் தொடர்ந்து செல்லும் பிற வாகன ஓட்டிகளுக்கு, இது சிரமத்தை ஏற்படுத்துகிறது.
குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்லும் வாகன ஓட்டிகளின் கண்களை பாறைத் துகள்கள் பதம் பார்க்கின்றன.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, அதிக பாரம் ஏற்றிச்செல்லும் லாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

