/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சேதமடைந்த மின் கம்பங்களால் தேவராஜபுரத்தில் விபத்து அபாயம்
/
சேதமடைந்த மின் கம்பங்களால் தேவராஜபுரத்தில் விபத்து அபாயம்
சேதமடைந்த மின் கம்பங்களால் தேவராஜபுரத்தில் விபத்து அபாயம்
சேதமடைந்த மின் கம்பங்களால் தேவராஜபுரத்தில் விபத்து அபாயம்
ADDED : செப் 28, 2024 12:31 AM

செய்யூர்:செய்யூர் ஊராட்சிக்கு உட்பட்ட தேவராஜபுரம் கிராமத்தில், 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதியில் உள்ள குடியிருப்புகள், வணிக வளாகங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு, நல்லுாரில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின் வினியோகம் வழங்கப்பட்டு வருகிறது.
தேவராஜபுரம் ஆர்.சி., நகர் மற்றும் மாதா கோவில் குறுக்குத் தெரு பகுதிகளில் அமைக்கப்பட்டுள்ள மின் கம்பங்கள் தேமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளன.
மின் கம்பங்களில் சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து, இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவிற்கு சேதமடைந்து உள்ளன. சில மின் கம்பங்களின் அடிப்பகுதி சேதமடைந்து, சாய்ந்து விழும் நிலையில் உள்ளன. பலத்த காற்று வீசினால், மின் கம்பங்கள் சாய்ந்து தேவராஜபுரம் பகுதியில் விபத்து ஏற்படும் அபாய நிலை உள்ளது.
ஆகையால், துறை சார்ந்த அதிகாரிகள் ஆய்வு செய்து, பருவ மழைக்கு முன், சேதமடைந்துள்ள மின் கம்பங்களை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதிவாசிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.