/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் காய்ந்த புளியமரம் மாம்பாக்கத்தில் விபத்து அபாயம்
/
சாலையோரம் காய்ந்த புளியமரம் மாம்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையோரம் காய்ந்த புளியமரம் மாம்பாக்கத்தில் விபத்து அபாயம்
சாலையோரம் காய்ந்த புளியமரம் மாம்பாக்கத்தில் விபத்து அபாயம்
ADDED : ஜூன் 22, 2025 10:53 PM

மதுராந்தகம:மதுராந்தகம் -- சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில், சாலை ஓரங்களில் புளிய மரம் மற்றும் காட்டுவாகை மரங்கள் நடவு செய்யப்பட்டு, நெடுஞ்சாலைத் துறையினரால் பராமரிக்கப்பட்டு வந்தன.
பருவ மழை காலங்களில், சூறாவளி காற்றில் சாலையில் முறிந்து விழும் மரங்களை, வெட்டி அப்புறப்படுத்தி வந்தனர்.
தற்போது, மதுராந்தகம் -- சூணாம்பேடு மாநில நெடுஞ்சாலையில், பழமையான புளிய மரங்கள் மற்றும் காட்டுவாகை மரங்கள் வெப்பம் மற்றும் உரிய பராமரிப்பின்றி, காய்ந்து போய் உள்ளன.
அந்த வகையில், மாம்பாக்கம் பேருந்து பயணியர் நிழற்குடை, கெண்டிரச்சேரி, முதுகரை உள்ளிட்ட பகுதிகளில், காய்ந்து போன புளிய மரங்கள் உள்ளன. இவை, சூறைக்காற்றில் உடைந்து விழும் நிலையில் உள்ளன.
வாகன போக்குவரத்து அதிகம் உள்ள இந்த நெடுஞ்சாலையில், சாலையோரம் உள்ள காய்ந்த புளிய மரங்களால் விபத்து ஏற்படும் முன், நெடுஞ்சாலைத் துறையினர் வெட்டி அப்புறப்படுத்த வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.