/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
/
சாலையோரம் காய்ந்த மரம் வாகன ஓட்டிகள் அச்சம்
ADDED : டிச 12, 2025 06:23 AM

மதுராந்தகம்: மதுராந்தகம் அருகே, தேசிய நெடுஞ்சாலையோரம் உள்ள காய்ந்த மரத்தால், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் கடந்து செல்கின்றனர்.
மதுராந்தகம் அருகே சென்னை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில், ஊனமலை -- பாக்கம் இடைப்பட்ட பகுதியில், தனியார் உணவகம் உள்ளது. இதன் அருகே, காய்ந்த நிலையில் உள்ள மரத்தின் ஒரு பகுதி உடைந்து விழுந்துள்ளது.
காய்ந்து போன மரம் அருகே, தேசிய நெடுஞ்சாலையின் சென்னை செல்லும் மார்க்கம் உள்ளது.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் செல்லும் இச்சாலையோரம், ஆபத்தான இந்த காய்ந்த மரம் உள்ளதால், எப்போது வேண்டுமானாலும் முறிந்து விழும் அபாயம் உள்ளது.
எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன், பயன்பாடற்று காய்ந்த நிலையிலுள்ள இந்த மரத்தை வெட்டி அப்புறப்படுத்த, நெடுஞ்சாலை துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

