/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
/
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க கோரிக்கை
ADDED : டிச 12, 2025 06:21 AM

மதுராந்தகம்: மதுராந்தகத்தில் உள்ள திருவெண்காட்டீஸ்வரர் கோவில் குளத்தை சீரமைக்க வேண்டுமென, பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
மதுராந்தகத்தில், பழமையான திருவெண்காட்டீஸ்வரர் கோவில் உள்ளது. கோவிலை தற்போது, ஹிந்து சமய அறநிலையத்துறை பராமரித்து வருகிறது.
இக்கோவிலின் எதிரே, சரும தீர்த்த குளம் உள்ளது.சரும நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, இந்த குளத்து நீர் நலம் தரும் என, மக்களால் நம்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இந்த குளம் பராமரிப்பு இல்லாமல், குளக்கரையைச் சுற்றி செடிகள் வளர்ந்துள்ளன. அத்துடன், இப்பகுதியில் உள்ள வீடுகளின் குப்பையை கொட்டும் இடமாகவும் மாறி வருகிறது.
எனவே, இந்த குளத்தைச் சுற்றியுள்ள செடிகளை அகற்றி, மதில் சுவரை சீரமைக்க வேண்டுமென, இப்பகுதி மக்கள் மற்றும் பக்தர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.