/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் அளவெடுக்கும் மருத்துவ முகாம்
/
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் அளவெடுக்கும் மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் அளவெடுக்கும் மருத்துவ முகாம்
மாற்றுத்திறனாளிகள் உதவி உபகரணம் அளவெடுக்கும் மருத்துவ முகாம்
ADDED : டிச 12, 2025 06:20 AM

திருப்போரூர்: திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில், மாற்றுத்திறனாளிகளுக்கான உதவி உபகரணங்கள் அளவெடுக்கும் மருத்துவ முகாம், நேற்று நடந்தது.
செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் 'அலிம்கோ' நிறுவனத்தின் மூலமாக உதவி உபகரணங்கள் வழங்க அளவெடுக்கும் முகாம் நேற்று நடைபெற்றது.
முகாமை, செங்கல்பட்டு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் திருவருள்செல்வி, மாவட்ட அலுவலர் குமரன், திட்ட ஒருங்கிணைப்பாளர் சரவணன் ஆகியோர் துவக்கி வைத்தனர். முகாம், காலை 9:00 மணி முதல் 2:00 மணி வரை நடைபெற்றது.
திருப்போரூர் ஒன்றியத்தைச் சேர்ந்த 18 வயது வரை உள்ள 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறன் குழந்தைகள் பங்கேற்று பயனடைந்தனர்.
பள்ளி தலைமை ஆசிரியர் தெமினா கிராணப், திருப்போரூர் வட்டார மேற்பார்வையாளர் திருவருள்செல்வி, ஆசிரியர் பயிற்றுநர்கள் பங்கேற்றனர்.