/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சிங்கபெருமாள் கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
/
சிங்கபெருமாள் கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
சிங்கபெருமாள் கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
சிங்கபெருமாள் கோவில் பள்ளியில் மாணவர்களுக்கு இலவச சைக்கிள்
ADDED : டிச 12, 2025 06:19 AM

சிங்கபெருமாள் கோவில்: சிங்கபெருமாள் கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில், பிளஸ் - 1 வகுப்பு மாணவ -- மாணவியருக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காட்டாங்கொளத்துார் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் - அனுமந்தபுரம் சாலையில், அரசு மேல்நிலைப் பள்ளி உள்ளது. இதில் 700க்கும் மேற்பட்ட மாணவ - - மாணவியர் படித்து வருகின்றனர்.
இந்த பள்ளியில் 2025 - -26ம் கல்வியாண்டில், பிளஸ் -1 வகுப்பு பயிலும் மாணவ - - மாணவியருக்கு, இலவச சைக்கிள் வழங்கப்படாமல் இருந்தது.
இந்நிலையில், தற்போது பிளஸ் -1 வகுப்பு பயிலும் மாணவ -- மாணவியர் 200 பேருக்கு சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி, நேற்று மதியம் நடந்தது.
இதில், செங்கல்பட்டு தி.மு.க., - எம்.எல்.ஏ., வரலட்சுமி சிறப்பு விருந்தினராக பங்கேற்று, சைக்கிள்களை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், அரசு பள்ளி தலைமை ஆசிரியர் டெய்சி, பள்ளி ஆசிரியர்கள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், சிங்கபெருமாள் கோவில் ஊராட்சி மன்ற துணை தலைவர் ராஜன் உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

