/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சத்துணவு திட்டத்தில் உதவியாளர்களை நியமிக்க முடிவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்களுக்கு 'கல்தா'
/
சத்துணவு திட்டத்தில் உதவியாளர்களை நியமிக்க முடிவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்களுக்கு 'கல்தா'
சத்துணவு திட்டத்தில் உதவியாளர்களை நியமிக்க முடிவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்களுக்கு 'கல்தா'
சத்துணவு திட்டத்தில் உதவியாளர்களை நியமிக்க முடிவு அமைப்பாளர், சமையலர் பணியிடங்களுக்கு 'கல்தா'
ADDED : ஜன 06, 2025 03:29 AM
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் சத்துணவு திட்டத்தில், 633 காலி பணியிடங்கள் உள்ள நிலையில், உதவியாளர் பணியிடம் மட்டும் நிரப்ப சமீபத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வறுமையில் வாடும் கிராமப்புற ஏழை மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு கல்வி, உணவு ஆகியவை ஒருசேர வழங்கும் நோக்கத்தில், 1955ல் அன்றைய முதல்வர் காமராஜரால், மதிய உணவு திட்டம் கொண்டு வரப்பட்டது.
அதன்பின், மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆர்., 1982ல் கிராமம் மற்றும் நகரம் என, இரு பிரிவுகளாக சத்துணவு திட்டத்தை விரிவுபடுத்தினார்.
இத்திட்டத்தின் கீழ் அரசு, அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில், 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவ - மாணவியருக்கு மதிய உணவு வழங்கப்படுகிறது.
இத்திட்டத்தின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில், 630 சத்துணவு மையங்களில், 619 சத்துணவு அமைப்பாளர்கள், 619 சமையலர்கள், 619 உதவியாளர்கள் என, மொத்தம் 1,857 பணியிடங்கள் உள்ளன. இதில், 252 சத்துணவு அமைப்பாளர்கள், 143 சமையலர்கள், 238 உதவியாளர்கள் என, 633 பணியிடங்கள் காலியாக உள்ளன.
இதனால், ஒரு மையத்தை கவனிக்க வேண்டிய அமைப்பாளர்கள் இரண்டு மையங்களை கவனிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.அதேபோல், சமையலருக்கும் கூடுதல் மையங்களில் உணவு சமைக்கும் நெருக்கடியான சூழல் நிலவுகிறது. ஒரு சத்துணவு மையத்தில் சமையல் செய்து, மற்றொரு சத்துணவு மையத்திற்கு எடுத்து செல்ல வேண்டியுள்ளதால், பணிச்சுமை இருப்பதாக புலம்பி வருகின்றனர். குறித்த நேரத்திற்குள் உணவு கிடைப்பதில் தாமதம் ஏற்படுவதாகவும் புகார் எழுகிறது.
இதுகுறித்து, காஞ்சிபுரம் ஊரக வளர்ச்சி துறை சத்துணவு பிரிவு அதிகாரி கூறியதாவது:
தமிழகம் முழுதும் சத்துணவு துறையில் பணியாளர்களை நியமிக்க அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. இதில், காலி பணியிடங்களை நிரப்புவதற்கு, அந்தந்த மாவட்டம் நடவடிக்கை எடுத்து வருகிறது. தகுதி வாய்ந்த நபர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெற்று, பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.