ADDED : மார் 17, 2024 01:58 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பவுஞ்சூர்,:பவுஞ்சூர் அருகே தட்டாம்பட்டு கிராமத்தில், மதுராந்தகம் - கூவத்துார் மாநில நெடுஞ்சாலையில், அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில், பலத்த காயமடைந்த நிலையில் மான் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது.
அப்பகுதி வழியாக சென்ற வாகன ஓட்டிகள், வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் வருவதற்கு முன் மான் உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்து வந்த வனத்துறையினர், உயிரிழந்த மானை ஆய்வு செய்ததில், 2 வயது மதிக்கத்தக்க ஆண் மான் என தெரிய வந்தது.
இதையடுத்து, சீவாடி கால்நடை மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு, கொல்லத்தநல்லுார் காப்புக்காட்டில் புதைக்கப்பட்டது.

