/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செங்கையில் 'டெல்டா' குழு போலீசார் கண்காணிப்பு
/
செங்கையில் 'டெல்டா' குழு போலீசார் கண்காணிப்பு
ADDED : பிப் 18, 2024 04:48 AM
மாமல்லபுரம் : சென்னை பகுதிகளில் பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், ரவுடிகள் புறநகர் பகுதிகளில் பதுங்குவது தொடர்ந்து வருகிறது.
அதனால், மாவட்ட பகுதிகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தவும், குற்றங்களை தடுக்கவும், செங்கல்பட்டு, மாமல்லபுரம், மதுராந்தகம் ஆகிய துணை கோட்டங்களுக்கு, தலா ஒரு 'டெல்டா' போலீஸ் குழுவை அமைத்து, எஸ்.பி., சாய் பிரணீத் அண்மையில் உத்தரவிட்டார்.
ஒவ்வொரு குழுவிலும், எஸ்.ஐ., போலீசார் என, 10 பேர் இடம்பெற்றுள்ளனர். குழுவிற்கு, தலா ஒரு வாகனமும் வழங்கப்பட்டு உள்ளது.
இக்குழுவினர், முக்கிய இடங்களில், சந்தேகத்திற்குரிய நபர்கள், வாகனங்கள் குறித்து கண்காணித்து வருகின்றனர்.