/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
பயன்பாடற்ற வாகனங்களை பொது ஏலம் விட கோரிக்கை
/
பயன்பாடற்ற வாகனங்களை பொது ஏலம் விட கோரிக்கை
ADDED : அக் 23, 2024 01:23 AM

மதுராந்தகம்:மதுராந்தகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலகம் அமைந்துள்ளது. இதில், பல்வேறு துறை சார்ந்த, 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் பணியாற்றி வருகின்றனர்.
வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் ஒன்றிய குழு பெருந்தலைவர் ஆகியோர், ஊராட்சி பகுதிகளில் நடைபெறும் பணிகளை பார்வையிடவும், துறை சார்ந்த அலுவலகப் பணிகளுக்கு விரைந்து சென்று வரும் வகையிலும், வாகனங்கள் வழங்கப்பட்டன.
மதுராந்தகம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில், மகேந்திரா பொலிரோ மற்றும் டாடா சுமோ வாகனங்கள் உள்ளன.
தற்போது, சில ஆண்டுகளாக பராமரிப்பு இன்றி பழுதடைந்த இரண்டு வாகனங்களும், வட்டார வளர்ச்சி அலுவலக வளாகத்தில் நிறுத்தப்பட்டுள்ளன.
வெயில் மற்றும் மழைக்காலங்களில், அலுவலகத்தின் வெளிப்பகுதியிலேயே நிறுத்தப்பட்டுள்ளதால், வாகனத்தில் உள்ள இரும்புகள் துருப்பிடித்துள்ளன.
அருகில் உள்ள மரக்கிளை முறிந்து, வாகனத்தின் மீது விழுந்து, வாகனம் சேதமடைந்துள்ளது.
அதனால், பயன்பாடற்று நிறுத்தப்பட்டுள்ள வாகனங்களை, துறை சார்ந்த பொறியாளர் ஆய்வு செய்து, பொது ஏலம் விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.