/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிளாம்பாக்கத்தில் பிரீபெய்டு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை
/
கிளாம்பாக்கத்தில் பிரீபெய்டு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை
கிளாம்பாக்கத்தில் பிரீபெய்டு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை
கிளாம்பாக்கத்தில் பிரீபெய்டு ஆட்டோ தொழிற்சங்கங்கள் கோரிக்கை
ADDED : ஜன 18, 2024 01:49 AM
சென்னை:கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பிரீபெய்டு ஆட்டோ சேவையை துவக்க சி.எம்.டி.ஏ., நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக வண்டலுார் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் டிச., 30ல் திறக்கப்பட்டது.
இதில் முதல் கட்டமாக, அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் மட்டும் இயக்கப்படுகின்றன.
பொங்கலுக்கு பின், அனைத்து அரசு போக்குவரத்து கழக பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்துக்கு மாற்றப்படும் என அரசு அறிவித்துள்ளது.
இந்நிலையில், கிளாம்பாக்கத்துக்கு வரும் பயணியர், சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு செல்வதில் சிரமம் ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது. இதற்காக இங்கு முறையான ஆட்டோ சேவை இல்லை.
இது குறித்து சி.எம்.டி.ஏ., மற்றும் போக்குவரத்து துறைக்கு தமிழக அனைத்து ஆட்டோ தொழிற்சங்க கூட்டமைப்பின் சார்பில், அதன் பொது செயலர் எம்.ஜி. அழகேசன், அளித்துள்ள மனு:
கோயம்பேடில் உள்ளது போல கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொது மக்கள் வசதிக்காக பிரீபெய்டு ஆட்டோ சேவையை உடனடியாக துவங்க வேண்டும்.
குறைந்தபட்சம், 500 ஆட்டோக்களை உள்ளடக்கியதாக இந்த சேவை இருக்க வேண்டும். ஆட்டோ ஓட்டுனர் தொழிற்சங்கங்களின் பிரதிநிதிகள் அடங்கிய குழு அமைக்க வேண்டும்.
இங்கு பிரீபெய்டு சேவையில் இணையும் ஆட்டோ தொழிலாளிகளுக்கு உரிய அதிகாரிகள் கையெழுத்துடன் அடையாள அட்டைகள் வழங்க வேண்டும்.
இத்துடன், கிளாம்பாக்கத்தில் ஆட்டோ இயக்க, 1,000 ரூபாய் வீதம் கட்டணம் வசூலிப்பதை நிறுத்த வேண்டும்.
இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் அடிப்படையில் பிரீபெய்டு ஆட்டோ சேவை துவங்குவது குறித்து சி.எம்.டி.ஏ., அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர். விரைவில் இதற்கான பணிகள் நடக்கும் என்று கூறப்படுகிறது