/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கிராம உதவியாளர் தற்கொலை விவகாரம் ஆர்.டி.ஓ.,வை கைது செய்ய வலியுறுத்தல்
/
கிராம உதவியாளர் தற்கொலை விவகாரம் ஆர்.டி.ஓ.,வை கைது செய்ய வலியுறுத்தல்
கிராம உதவியாளர் தற்கொலை விவகாரம் ஆர்.டி.ஓ.,வை கைது செய்ய வலியுறுத்தல்
கிராம உதவியாளர் தற்கொலை விவகாரம் ஆர்.டி.ஓ.,வை கைது செய்ய வலியுறுத்தல்
ADDED : ஏப் 23, 2025 07:56 PM
மதுராந்தகம்:''மதுராந்தகத்தில் இறந்த கிராம உதவியாளரின் மன உளைச்சலுக்குக் காரணமான ஆர்.டி.ஓ.,வை கைது செய்ய வேண்டும்,'' என, தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாநில தலைவர் தமிழ்ச்செல்வி, பொதுச் செயலர் ஜெயராஜ ராஜேஸ்வரன் கூறியிருப்பதாவது:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் தாலுகாவில், 15 கிராம உதவியாளர்களுக்கு பணிமாறுதல் வழங்கப்பட்டது.
சங்க நிர்வாகிகள் தாசில்தாரிடம், பணிமாறுதலை நிறுத்தி வைக்க கோரினர்.
இந்நிலையில் ஆர்.டி.ஓ., ரம்யா அங்கு ஆய்வுக்கு சென்ற போது, அச்சிறுபாக்கம் கிராம உதவியாளர் கீதா பணிக்கு வராததால் விசாரித்துள்ளார்.
விடுப்பில் இருந்த அவரை மறுநாள் திட்டி, பணிமாறுதலை ஏற்று உடனே பணியேற்க நிர்பந்தித்ததால், அவர்  மன உளைச்சலில் இருந்தார்.
சில நாட்களில் மீண்டும் ஆய்வுக்குச் சென்ற ஆர்.டி.ஓ., ரம்யா, 'ஏன் இன்னும் பணியில் இருந்து விடுவிக்கப்படவில்லை எனக் கேட்டு, கீதாவை பலரது முன்னிலையில் திட்டியுள்ளார்.
இதனால் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்ற கீதா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்துள்ளார்.
அனைத்துத் துறைகளிலும் உயர் அலுவலர்கள், தங்களுக்கு அதிகாரம் உள்ளது என்பதற்காக, பொது வெளியில் அனைவரது முன்னிலையிலும், மாதக் கூட்டங்களிலும், தனக்கு கீழ் பணியாற்றுவோரை தரக்குறைவாக பேசுவது, நடத்துவது மனோவியாதியாகி விட்டது.
இங்கு வரம்பு மீறி பேசிய ஆர்.டி.ஓ.,வை கண்டிக்கிறோம். அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அவரை கைது செய்து உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்.
பாதிக்கப்பட்ட பெண்ணின் வாரிசுக்கு கருணை அடிப்படையில் வேலை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

