/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
முந்திரி விளைச்சலை அதிகரிக்க கோரிக்கை
/
முந்திரி விளைச்சலை அதிகரிக்க கோரிக்கை
ADDED : ஜூன் 28, 2025 10:15 PM
திருப்போரூர்:திருப்போரூர் வனத்துறை காடுகளில், முந்திரி விளைச்சலை அதிகப்படுத்த வேண்டும் என, விவசாயிகளிடம் கோரிக்கை எழுந்து உள்ளது.
திருப்போரூர் ஒன்றியத்தில் திருப்போரூர், சிறுதாவூர், மடையத்துார், செம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில், வனத்துறை காடுகள் உள்ளன.
காட்டு பகுதிகளில் முந்திரி, சவுக்கு, தைலம், காட்டு மரங்கள் அதிக அளவில் உள்ளன.
கடந்த, 20 ஆண்டுகளுக்கு முன், இந்த பகுதிகளில், முந்திரி சாகுபடி அதிகம் நடந்தது. தற்போது, முந்திரி சாகுபடி குறைந்துள்ளது.
எனவே, முந்திரி விளைச்சலை அதிகப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கோரிக்கை வலுத்துள்ளது.
இதுகுறித்து, பொதுமக்கள் கூறியதாவது:
முந்திரி விளைச்சலை மீண்டும் அதிகரிக்க, தோட்டக்கலை அதிகாரிகளின் ஆலோசனையுடன், முந்திரி செடிகளை அதிகம் பயிரிட வேண்டும். முந்திரி விளைச்சலுக்கு ஏற்ற மண் வளம், திருப்போரூர் காட்டுப் பகுதியில் உள்ளது.
வனத்துறை அதிகாரிகள், பழைய முந்திரி மரங்களை புத்துயிர் அடைய முயற்சி செய்து பார்க்கலாம்.
அதே நேரத்தில் புதிய வீரிய ரக முந்திரி செடிகளை நடவு செய்து, முந்திரி விளைச்சலை அதிகப்படுத்தலாம்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.