/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
செய்யூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
/
செய்யூர் டாஸ்மாக் கடையை அகற்ற வலியுறுத்தல்
ADDED : ஏப் 13, 2025 01:51 AM

செய்யூர்:செய்யூரில் எல்லையம்மன்கோவில் செல்லும் நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை இயங்குகிறது.
இந்த சாலையில் தினசரி ஏராளமான வாகனங்கள் கடந்து செல்கின்றன.
கடந்த ஆண்டு செய்யூர்-போளூர் சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட நிலையில் தினசரி கார், லாரி, பேருந்துகள் என, வாகனங்கள் கூடுதலாக செல்கின்றன.
நெடுஞ்சாலை ஓரத்தில் டாஸ்மாக் கடை செயல்படுவதால், குடி மகன்கள் மதுஅருந்தி விட்டு வாகனங்கள் இயக்குவதால் விபத்துகள் ஏற்படுகின்றன.
மேலும் டாஸ்மாக் கடை அமைந்துள்ள பகுதியில் மூன்று தனியார் பள்ளிகள் செயல்படுகின்றன. தினசரி நுாற்றுக்கணக்கான பள்ளி மாணவ-மாணவியர் அந்த சாலை வழியாக கடந்து செல்கின்றனர்.
ஆகையால் செய்யூர் டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்கின்றனர்.

