/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மதுராந்தகம் பஸ் நிலையம் இடிக்கும் பணி துவக்கம்
/
மதுராந்தகம் பஸ் நிலையம் இடிக்கும் பணி துவக்கம்
ADDED : ஜன 06, 2024 11:37 PM

மதுராந்தகம்:மதுராந்தகம் நகராட்சி, சென்னை- - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது, அண்ணா பேருந்து நிலையம்.
செய்யூர், சூணாம்பேடு, உத்திரமேரூர், வேடந்தாங்கல், ராமாபுரம், அச்சிறுபாக்கம் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள், மதுராந்தகம் பேருந்து நிலையத்தை பயன்படுத்தி வருகின்றனர்.இந்த பேருந்து நிலையம், 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது. கட்டடம் பழுதடைந்ததால், கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ், 2.40 கோடி ரூபாய் மதிப்பில், நவீன வசதிகளுடன் பேருந்து நிலையம் கட்டப்பட உள்ளது.
கடந்தாண்டு செப்டம்பரில் இதற்கான ஒப்பந்தம் கோரப்பட்டது. தற்போது, 5 லட்சம் ரூபாய் மதிப்பில், பழைய பேருந்து நிலையத்தை இடித்து அப்புறப்படுத்த ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது.
இதையடுத்து, ஒப்பந்த நிறுவனம் பழைய பேருந்து நிலையத்தை இடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.