/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
சென்னை டாக்டர் மீது தாக்குதல் செங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்
/
சென்னை டாக்டர் மீது தாக்குதல் செங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை டாக்டர் மீது தாக்குதல் செங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்
சென்னை டாக்டர் மீது தாக்குதல் செங்கையில் கண்டன ஆர்ப்பாட்டம்
ADDED : நவ 13, 2024 08:08 PM
செங்கல்பட்டு:சென்னையில் அரசு டாக்டர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியதை கண்டித்து, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், நேற்று காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை கலைஞர் நுாற்றாண்டு சிறப்பு மருத்துவமனையில், மருத்துவ புற்றுநோயியல் நிபுணர் பாலாஜியை, கொலை வெறி தாக்குதல் நடத்தியவர் மீது, சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கக்கோரி, செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி வளாகத்தில், தமிழ்நாடு அரசு டாக்டர்கள் சங்கம், செங்கல்பட்டு மாவட்டம் சார்பில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதில், செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள் உட்பட அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்க, மருத்துவமனை வளாகத்தில் தனியாக காவல் நிலையம் அமைக்க வேண்டும் என, அவர்கள் வலியுறுத்தினர்.
அதன்பின், டாக்டர்கள் காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவசர சிகிச்சை பிரிவில் மட்டும், நோயாளிகளுக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகின்றனர்.