/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
/
வீட்டுமனை பட்டா கோரி ஆர்ப்பாட்டம்
ADDED : அக் 25, 2024 08:04 PM
செங்கல்பட்டு:செங்கல்பட்டு, வண்டலுார் தாலுகாவில், மேலக்கோட்டையூர் ஊராட்சியில், ராஜிவ் காந்தி நகர் மக்களுக்கு, கடந்த 2000ம் ஆண்டு வழங்கிய வீட்டுமனை பட்டா அடங்கலில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு, வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதார நிலையம், சமுதாய கூடம் அமைத்துர வேண்டும்.
குறைந்த மின் அழுத்த பிரச்னைக்கு தீர்வுகாண வேண்டும் உட்பட, பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில், வட்ட செயலர் சேஷாத்திரி தலைமையில், செங்கல்பட்டு கலெக்டர் அலுவலகம் அருகில், நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாவட்ட செயலர் பாரதி அண்ணா உள்ளிட்ட பலர் பேசினர். இதில், 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.