/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
புதுப்பட்டினத்தில் கலைஞர் நுாலகம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
/
புதுப்பட்டினத்தில் கலைஞர் நுாலகம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
புதுப்பட்டினத்தில் கலைஞர் நுாலகம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
புதுப்பட்டினத்தில் கலைஞர் நுாலகம் துணை முதல்வர் உதயநிதி திறப்பு
ADDED : ஜன 13, 2025 12:56 AM

புதுப்பட்டினம்,:புதுப்பட்டினத்தில், கலைஞர் நுாலகத்தை, துணை முதல்வர் உதயநிதி திறந்தார்.
முன்னாள் முதல்வர் கருணாநிதி நுாற்றாண்டு விழாவை, தி.மு.க.,வினர் கொண்டாடி வருகின்றனர். இவ்விழாவின் ஒரு பகுதியாக, சட்டசபை தொகுதிதோறும் கலைஞர் நுாலகம் திறக்க, கட்சித் தலைவர் ஸ்டாலின் அறிவுறுத்தினார்.
இதன்படி, செய்யூர் தொகுதி கல்பாக்கம், புதுப்பட்டினம், தனியார் வணிக வளாகத்தில், தி.மு.க., இளைஞரணி சார்பில், நேற்று, கலைஞர் நுாலகம் துவக்கப்பட்டது.
துணை முதல்வர் உதயநிதி இதை திறந்தார்.
காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., செல்வம், உத்திரேமேரூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., சுந்தர், மணப்பாறை - எம்.எல்.ஏ., அப்துல்சமது மற்றும் தி.மு.க., நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
உதயநிதி வருகைக்காக, அணுசக்தி துறை கல்பாக்கம் நகரியத்தை, கிழக்கு கடற்கரை சாலையுடன் இணைக்கும் புதிய பால சாலையை முற்றிலுமாக அடைத்தததால், இரண்டு மணி நேரம் பொதுமக்கள் அவதிக்குள்ளாகினர்.
செய்யூர் அடுத்த இடைக்கழிநாடு பேரூராட்சிக்கு உட்பட்ட கப்பிவாக்கம் கிராமத்தில், தி.மு.க., சார்பாக சமத்துவப் பொங்கல் விழா நேற்று நடந்தது.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக உதயநிதி பங்கேற்று, 5,000 பேருக்கு பொங்கல் பரிசு, 48 பேருக்கு கலைஞர் நுாற்றாண்டு நாணயம், பள்ளி மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை உள்ளிட்டவற்றை வழங்கினார்.