/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
/
கன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
கன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
கன்னியம்மன் கோவிலில் பக்தர்கள் அடிப்படை வசதிகளின்றி தவிப்பு
ADDED : ஜூலை 20, 2025 11:04 PM
செங்கல்பட்டு:மணப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் ஆடித்திருவிழா துவங்கியுள்ள நிலையில், ஆயிரக்ணக்கில் பக்தர்கள் வருவதால், அடிப்படை வசதிகள் செய்துதர வேண்டும் என, பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செங்கல்பட்டை அடுத்த மணப்பாக்கம் பாலாற்றங்கரையில், பிரசித்த பெற்ற கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆடித்திருவிழா, கன்னியம்மனுக்கு சிறப்பு அபிேஷகத்துடன், 17ம் தேதி துங்கியது.
ஆடி முதலாவது வெள்ளிக்கிழமையான நேற்று ஏராளமான பக்தர்கள், அம்மனை வழிப்பட்டனர். தொடர்ந்து, வெள்ளி, ஞாயிறு ஆகிய நாட்களில், பக்தர்கள் அதிகமாக வந்து, நீண்டநேரம் காத்திருந்து அம்மனை வழிபட்டு செல்கின்றனர்.
மூன்றாம் ஆடி வெள்ளிக்கிழமை, தீ மிதி திருவிழா நடைபெறும். இவ்விழாவில், செங்கல்பட்டு மாவட்டம் மட்டுமின்றி காஞ்சிபுரம், சென்னை, வேலுார், திருவண்ணாமலை, விழுப்புரம் மற்றும் சுற்றுப்புற மாவட்டங்களில் இருந்து, ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பர்.
முக்கியத்துவம் வாய்ந்த இந்த கோவில் வளாகத்தில், பக்தர்களுக்கு குடிநீர் வசதி, சுகாதார வசதிகள் செய்யப்படவில்லை. பெண்கள் குளிப்பதற்கான வசதிகள் இல்லை.
கோவில் வளாகத்தில், ஒரு கழிப்பறை மட்டுமே உள்ளது. ஏராளமான பக்தர்கள் வந்து செல்லும் இடத்தில், கூடுதல் கழிப்பறைகள் ஏற்படுத்த வேண்டும் என, ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகத்திடம், பக்தர்கள், பொதுமக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இதற்கிடையில், கோவிலுக்கு வரும் வாகனங்களிடம், நுழைவு கட்டணம் வசூலிக்க ஊராட்சி நிர்வாகம் ஆண்டுதோறும் ஏலம் விடப்படுகிறது. இந்த பணம் ஊராட்சி நிர்வாக கணக்கில் செலுத்தப்படுகிறது.
ஆனால், பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து தருவதில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் கோவில் நிர்வாகம் அலட்சியமாக உள்ளன. எனவே, பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதர, மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பக்தர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.