/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
மேல்மருவத்துார் தைப்பூச ஜோதி விழா பெருக்கரணையில் குவியும் பக்தர்கள்

ADDED : டிச 29, 2024 01:03 AM

சித்தாமூர்:மேல்மருவத்துார் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில், ஆண்டுதோறும் தைப்பூச ஜோதி விழா விமரிசையாக நடக்கும்.
தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் கர்நாடகா, ஆந்திரா மற்றும் தெலுங்கான உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து கார், வேன், பேருந்து மூலமாக லட்சக்கணக்கான பக்தர்கள் சக்தி மாலை அணிந்து வந்து வழிபாடு செய்வது வழக்கம்.
இந்த ஆண்டு டிச., 14ம் தேதி இருமுடி விழா துவங்கப்பட்டு, அடுத்த ஆண்டு பிப்.,11ம் தேதி தைப்பூச ஜோதி விழா நடக்க உள்ள நிலையில், தற்போது வெளியூர்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் மேல்மருவத்துார் வந்து வழிபாடு செய்து வருகின்றனர்.
பெரும்பாலான செவ்வாடை பக்தர்கள் அருகே 10 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பெருக்கரணை மரகத தண்டாயுதபாணி கோவிலில் குவிந்து குன்றின் மீது உள்ள தண்டாயுதபாணி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர்.