/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் செவ்வாய் தரிசனம்
/
கந்தசுவாமி கோவிலில் பக்தர்கள் செவ்வாய் தரிசனம்
ADDED : டிச 04, 2024 01:05 AM

திருப்போரூர்:திருப்போரூரில், அறுபடை வீட்டிற்கு நிகரான மும்மூர்த்தி அவதாரத்தை பிரதிபலிக்கும் விதத்தில், மூலவர் கந்த சுவாமி சுயம்பு மூர்த்தியாக பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.
இக்கோவிலில் நான்கு கால பூஜைகள், கிருத்திகை, சஷ்டி, விசாகம், பவுர்ணமி மற்றும் ஹிந்து பண்டிகை நாட்களில், சிறப்பு வழிபாடு நடக்கிறது.
இது தவிர கந்த சஷ்டி, மாசி பிரம்மோற்சவம், மாணிக்கவாசகர் உற்சவம், வசந்த விழா உள்ளிட்ட சிறப்பு விழாக்களும் நடக்கின்றன.
செவ்வாய்க்கிழமை கந்த பெருமானுக்கு உகந்த நாள் என்பதால், அன்று கந்த பெருமானை தரிசிக்க, ஏராளமானோர் திருப்போரூர் வருகின்றனர்.
அந்த வகையில், நேற்று காலை முதலே பக்தர்கள் கோவிலுக்கு வர ஆரம்பித்தனர்.
நீண்ட வரிசையில் நின்று கந்த சுவாமியை வழிபட்டனர். மொட்டை அடித்தல், எடைக்கு எடை துலா பாரம் எடுத்தல், வட்ட மண்டபம் சுற்றுதல் போன்ற நேர்த்திக்கடன்களை நிறைவேற்றினர்.