/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தினமலர் செய்தி எதிரொலி புதிய மின்மாற்றி அமைப்பு
/
தினமலர் செய்தி எதிரொலி புதிய மின்மாற்றி அமைப்பு
ADDED : டிச 07, 2024 08:21 PM
திருப்போரூர்:திருப்போரூர் ஒன்றியம், மாம்பாக்கத்தில் இருந்து மேடவாக்கம் செல்லும் சாலையில், பொன்மார் ஊராட்சி உள்ளது.
இந்த ஊராட்சியில், ஹவுசிங்போர்டு பகுதி செல்லும் சாலையில் உள்ள வெற்றிவேல் நகர், செல்லியம்மன் நகரில் 100 க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.
இந்த குடியிருப்பு பகுதிகளுக்கு மாம்பாக்கம் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் வினியோகம் செய்யப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக இங்கு வீடுகளுக்கு வினியோகிக்கப்படும் மின்சாரத்தில், குறைந்தழுத்த மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.
சில நேரங்களில் உயர் மின் அழுத்தம் ஏற்படும் போது மின் சாதன பொருட்களை இயக்க முடியவில்லை.
இதுகுறித்து உள்ளாட்சி பிரதிநிதிகள், பொதுமக்கள் மாம்பாக்கம் துணை மின்நிலையத்தில் முறையிட்டு வந்தனர். மேலும், நம் நாளிதழில் செய்தியும் வெளியானது.
இதைத் தொடர்ந்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து புதிய மின்மாற்றியை நேற்று முன்தினம் பொருத்தினர்.
மின்விநியோகம் சீரானதால், குடியிருப்புவாசிகள் நிம்மதி அடைந்தனர்.