/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பொறுப்பேற்பு
/
அணு ஆராய்ச்சி மைய இயக்குநர் பொறுப்பேற்பு
ADDED : ஜன 02, 2026 05:16 AM

கல்பாக்கம்:கல்பாக்கம், இந்திரா காந்தி அணு ஆராய்ச்சி மைய இயக்குநராக, ஸ்ரீகுமார் ஜி பொறுப்பேற்றார்.
செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அணுசக்தி துறை மைய இயக்குநராக, 2024 ஜூன் முதல் பணியாற்றிய கர்ஹாட்கர், நேற்று முன்தினம் ஓய்வு பெற்றார்.
இதன் புதிய இயக்குநராக மும்பை, பாபா அணு ஆராய்ச்சி மைய, அணுசக்தி மறுசுழற்சி வாரிய துணை முதன்மை செயல் அதிகாரி ஸ்ரீகுமார் ஜி, மத்திய அரசால் நியமிக்கப்பட்டார். இதையடுத்து அவர், நேற்று பொறுப்பேற்றார்.
அணுசக்தி எரிபொருள் மறுசுழற்சி முறை வடிவமைப்பு, கட்டுமானம், இயக்கம் ஆகிய தொழில்நுட்பங்களில் நிபுணத்துவம் பெற்றவர்.
கேரள மாநிலம், காலிகட் பல்கலையில் பொறியியல் பட்டம் பெற்று மும்பை, பாபா அணு ஆராய்ச்சி மையத்தில், 1990ல் பணியில் சேர்ந்தார். பின், வெவ்வேறு பிரிவுகளில் பணியாற்றி உள்ளார்.

