/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பொறுப்பேற்பு
/
தாம்பரம் போலீஸ் கமிஷனராக அமல்ராஜ் பொறுப்பேற்பு
ADDED : ஜன 02, 2026 05:17 AM

தாம்பரம்: தாம்பரம் புதிய போலீஸ் கமிஷனராக அமல்ராஜ், நேற்று பொறுப்பேற்றார்.
தாம்பரம் காவல் ஆணையரகம், 20 காவல் நிலையங்களுடன், 2022, ஜனவரியில் துவக்கப்பட்டது. இதன், முதல் கமிஷனராக, ரவி பணியாற்றினார். அவருக்குபின், கமிஷனராக இருந்த அமல்ராஜ், சென்னை அமலாக்க பணியாக, கூடுதல் டி.ஜி.பி.,யாக மாற்றப்பட்டார்.
அவருக்கு பதில், சென்னை மாநில குற்ற ஆவண காப்பாக கூடுதல் டி.ஜி.பி., யாக இருந்த அபின் தினேஷ் மோதக் நியமிக்கப்பட்டார். இவரது காலக்கட்டத்தில் குற்ற சம்பவங்களை மறைக்க, அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அபின் தினேஷ் மோதக் மாற்றப்பட்டு, மீண்டும் அமல்ராஜ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். கமிஷனராக அமல்ராஜ் நேற்று பொறுப்பேற்றார்.

