/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
திருவடிசூலம் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
/
திருவடிசூலம் குட்டையில் ஆண் சடலம் மீட்பு
ADDED : ஜன 02, 2026 05:18 AM
செங்கல்பட்டு: செங்கல்பட்டு அருகே திருவடிசூலத்தில், குட்டையில் இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு, போலீசார் விசாரிக்கின்றனர்.
அம்பத்துார் பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்த்தனன், 60. செங்கல்பட்டு அடுத்த திருவடிசூலம் பகுதியில் உள்ள தேவி கருமாரியம்மன் கோவிலில், எலக்ட்ரீஷியனாக வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் 2:30 மணியளவில் வெளியே சென்ற ஜனார்த்தனன், நீண்ட நேரமாக திரும்பவில்லை.
இதனால், உடன் வேலை பார்த்த நண்பர்கள் கோவில் வளாகத்தைச் சுற்றி தேடிய போது, அங்கே உள்ள குட்டை தண்ணீரில், இறந்த நிலையில் கிடந்துள்ளார். செங்கல்பட்டு தாலுகா போலீசார் மற்றும் செங்கல்பட்டு தீயணைப்பு வீரர்கள், ஜனார்த்தனன் உடலை நேற்று முன்தினம் இரவு 8:30 அளவில் மீட்டனர்.
ஜனார்த்தனன் இயற்கை உபாதை கழிக்க சென்ற போது தவறி விழுந்து இறந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என, போலீசார் விசாரிக்கின்றனர்.

