/
உள்ளூர் செய்திகள்
/
செங்கல்பட்டு
/
கீழ்பட்டு ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
/
கீழ்பட்டு ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேற்றம்
ADDED : அக் 20, 2024 12:19 AM

அச்சிறுபாக்கம்,:அச்சிறுபாக்கம் அருகே மின்னல் சித்தாமூர் ஊராட்சிக்கு உட்பட்டு, கீழ்பட்டு ஏரி அமைந்துள்ளது. அச்சிறுபாக்கம் பொதுப்பணித் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இந்த ஏரி, 230 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
இந்த ஏரியிலிருந்து மதகு வழியாக, பாசன நீர் கொண்டு சென்று, 400 ஏக்கருக்கும் மேற்பட்ட நிலப்பரப்பில் விவசாயம் செய்யப்படுகிறது.
கடந்த சில நாட்களாக பெய்து வரும் வடகிழக்கு பருவ மழையின் காரணமாக, ஏரியின் நீர்வரத்து கால்வாய்களில் இருந்து, அதிகப்படியான நீர் வருவதால், நேற்று ஏரி முழு கொள்ளளவை எட்டியது.
இதனால், ஏரியில் இருந்து உபரிநீர் வெளியேறும் கலங்கள் வழியாக நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கலங்கள் வழியாக உபரிநீர் வெளியேறுவதால், அப்பகுதியினர் மீன்பிடி வலைகள் அமைத்து மீன் பிடித்து வருகின்றனர்.